தேயிலை ஏற்றுமதி 15.6 சதவீதத்தால் வளர்ச்சி
கடந்த மாதம் 20.8 மெட்ரிக் தொன் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக, தேயிலை தரகு தரப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் 15.6 சதவீதம் ஏற்றுமதி வளர்ச்சியை எட்டியுள்ளதாக, அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.