தேயிலை ஏற்றுமதி அதிகரிப்பு
கடந்த மாதத்தில் 26 தசம் நான்கு மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக, துறைசார் அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் பூச்சியம் தசம் மூன்று மில்லிய கிலோகிராம் அதிகரிப்பாகும். இந்த வருடம் மார்ச் மாதம் ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலை மூலம் 22 தசம் நான்கு-ஐந்து பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது. இலங்கையின் தேயிலையை இறக்குமதி செய்வதில் ஈராக், துருக்கி, ரஷ்யா ஆகிய நாடுகள் முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.