Main Menu

தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும் பெரும்பான்மை பெற்ற முதலாவது உள்ளூராட்சி சபை

இதுவரையில் வெளியான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகளுக்கு அமைய, ஹம்பாந்தோட்டை பிரதேச சபையைத் தவிர ஏனைய உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சியமைக்கும் பெரும்பான்மையை எந்தவொரு கட்சியும் பெறவில்லை.
5 நகர சபைகள், 2 பிரதேச சபைகள் மற்றும் ஒரு மாநகர சபை என இதுவரையில் 8 உள்ளூராட்சி மன்றங்களுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி முதன்மை வகிக்கின்ற போதும், தனித்து ஆட்சியமைக்கும் பெரும்பான்மையைப் பெறவில்லை.
ஹப்புத்தளையில் சுயேட்சைக்குழு 1 முன்னிலை வகிக்கின்றது. எனினும் ஆட்சியமைக்கும் பெரும்பான்மை அமையவில்லை.
ஏனைய சபைகளில் தேசிய மக்கள் சக்தி முன்னிலை வகிக்கின்ற போதும், தனித்து ஆட்சியமைக்கும் பெரும்பான்மையைப் பெறவில்லை.
இறுதியாக வெளியான ஹம்பாந்தோட்டை பிரதேச சபையின் முடிவுகளுக்கமைய, அங்கு ஆட்சியமைக்கும் பெரும்பான்மையைத் தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது.
பகிரவும்...
0Shares