தேசிய நாள் நிகழ்வுகள்! – சனிக்கிழமை வரை மூடப்படும் ஈஃபிள் கோபுரம்!!

தேசிய நாள் நிகழ்வுகளை ஒட்டி, இன்று வியாழக்கிழமை மாலையில் மூடப்படும் ஈஃபிள் கோபுரம், நாளை மறுநாள் மீண்டும் சனிக்கிழமை பொதுமக்களுக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 2.30 மணிக்கு பொதுமக்களுக்காக மூடப்பட்ட ஈஃபிள் கோபுரம், மீண்டும் வரும் சனிக்கிழமை காலை தான்  பொதுமக்களுக்காக திறக்கப்படும் என ஈஃபிள் கோபுரத்தின் உத்தியோக பூர்வ பேஸ்ஃபுக் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி ஆகியோடு, இம்மானுவல் மக்ரோன் தம்பதியினரும் இரவு உணவு விருந்தில் கலந்துகொள்கிறார்கள். இது ஈஃபிள் கோபுரத்தின் இரண்டாவது தளத்தில் இன்று இரவு இடம்பெறுகிறது.
தவிர, நாளை வெள்ளிக்கிழமை தேசிய நாளின் போது பொதுமக்களுக்காக முற்றாக தடை விதிக்கப்பட்டு, மறுநாள் சனிக்கிழமை காலை 9 மணிக்கு கோபுரம் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர தேசிய நாளை நினைவு கூரும் விதமாக பல வண்ண விளக்குகளில் ஈஃபிள் கோபுரம் ஜொலிக்க உள்ளதும், நாளை இரவு வானவேடிக்கைகளும் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது. சுற்றுலாப்பயணிகள் ஈஃபிள் கோபுரத்தில் ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்ட போதும், வாண வேடிக்கைகளை காண அதிகளவான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !