தேசிய அரசாங்க சர்ச்சை குறித்து இன்று முக்கிய சந்திப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்றிரவு 8 மணிக்கு இக்கூட்டம் இடம்பெறவுள்ளது. இக்கூட்டத்தில், அண்மையில் பதவிகளை இராஜினாமா செய்த ஸ்ரீலங்கா சதந்திரக் கட்சியின் 16 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பதவிகளை இராஜினாமா செய்த அமைச்சர்கள் உள்ளிட்ட 16 பேரும், எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் தனித்து எதிரணியாக அமரவுள்ளதாக குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில், இன்றைய சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

குறித்த 16 பேரின் தீர்மானம் தொடர்பாக இன்றைய தினம் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !