தேசிய அரசாங்கம் தொடர்பான பிரேரணை பிற்போடப்பட்டது

தேசிய அரசாங்கத்தினை ஸ்தாபிப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருந்த பிரேரணை  பிற்போடப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணையை நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) சமர்ப்பிக்கப்போவதில்லை என சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இந்த பிரேரணையை எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அரசாங்கத்தினை நிறுவுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள, நேற்று இடம்பெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்தப் பிரேரணையை விவாதத்திற்கு எடுப்பதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஜேவிபி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி.ஆகிய கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.

எனினும், அரசாங்க செயற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று அரசதரப்பு பிரதிநிதிகள் வாதிட்டனர்.

அதற்கமைய, இன்று முழுநாளும் விவாதம் நடத்தப்பட்ட பின்னர், மாலையில் வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வாக்கெடுப்பில் ஐக்கிய தேசிய முன்னணி கலந்துகொள்ளவில்லையென தீர்மானித்துள்ளது.

இதேவேளை தேசிய அரசாங்கத்தினை ஸ்தாபிப்பதற்கு மஹிந்த அணி தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !