தேசிய அரசாங்கத்தில் ஜனாதிபதிக்கு விருப்பமில்லை!- சுசில் பிரேமஜயந்த

ஐக்கிய தேசிய கட்சியுடனான கூட்டாட்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விருப்பமற்று செயற்பட்டு வருவதனை அவரது செயற்பாடுகள் தற்போது நிரூபிக்கின்றதென, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கூட்டு எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “தற்போதைய அரசாங்கம் ஜனாதிபதிக்கு அறிவிக்காமல் சில விடயங்களில் தன்னிச்சையாக செயற்பட்டு தீர்மானங்களை மேற்கொள்கின்றது.

இவ்வாறான செயற்பாடுகளினால் ஜனாதிபதியின் அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதாவது பிரதமர் நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் அமைச்சரவையை அவசர அவசரமாக கூட்டியமையையும் குறிப்பிடலாம்.

அதேபோன்று அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் எதிர்காலத்தில் நாட்டில் பிரதமராக வரக்கூடிய ஒருவர் தேசிய உணர்வுகளை மதிக்ககூடிய ஒருவராகவும் ஊழல் மோசடிகளில் தொடர்பு அற்றவராக இருக்க வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

அதாவது ஜனாதிபதி, ஐ.தே.க.வுடனான கூட்டாட்சியில் தற்போது நம்பிக்கையற்றவராகவும் விருப்பமற்றவராகவும் உள்ளமையை அவர் நிகழ்த்தும் உரைகளில் அவதானிக்க கூடியதாக உள்ளது” என சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டினார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !