Main Menu

தேசத்தின் பேரொளி !!! 26/11/2020

கடலலைகள் ஆர்ப்பரிக்க காந்தள்கள் முகிழ் விரிக்க
காரிருள் சூழ்ந்திருக்க கார்மேகம் குடைபிடிக்க
மின்னல் ஒளிதெறிக்க கங்குல் விலத்தி வந்த – கார்த்திகையின் மைந்தனே காலமெல்லாம் நீவிர் வாழ்க !
விடியலின் பேரொளியே வீரத்தின் விளைநிலமே
விளைநிலத்தின் சுடரொளியே விதியை
மாற்றிய வீரனே வல்வையின் மைந்தனே
வரலாற்றின் நாயகனே வாழ்த்துகிறோம் வாழ்க நீவிர் !
அறம் காத்த மறவனே புறம் படைத்த தீரனே
அஞ்சா நெஞ்சம் கொண்ட அண்ணனே
அன்னைத் தமிழை அன்னை மண்ணை
அரவணைத்த வள்ளலே வாழ்த்துகிறோம் வாழ்க நீவிர் !
இனமானம் காத்த வீரனை இலட்சியத்தோடு வாழ்ந்த மறவனை தேசத்தை மதித்த வீரனை தேசீயத்தைக் காத்த தீரனை
காலம்தந்த தலைமகனை ஞாலம் மீதில் வாழ்த்திடுவோம் !
தாய்நிலத்து மைந்தனே தாயகத்தின் வேந்தனே
கரிகாலச் சோழனே நம்பிக்கையின் நாயகனே
தன்மானத் தமிழனே புரட்சியை விதைத்த வீரனே
புதுநானூறு படைத்திட்ட பெருமகனே எங்கிருந்தாலும் வாழ்க வளமோடு நீவிர் !

கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A)

பகிரவும்...
0Shares