தேசத்தாய் பார்வதி அம்மாவின் நினைவுதினம் இன்றாகும்
தேசத் தாய் பார்வதி அம்மாவின் 6ம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.
தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் அவர்களுக்கு எமது வீரவணக்கம்.
80 வயதான அன்னை பார்வதியம்மா உடல்நிலை சுகையீனமற்ற நேரத்திலும் சிங்களமும் – பாரதத்தின் ஆதிக்க அகங்காரத்தினாலும் சிகிச்சை உரிய முறையில் வழங்கப்படாமல் இழுபறிகளினால் பல சொல்லனா துயர்களுக்கு மத்தியில் 20.02.2011 அன்று இயற்கை எய்தினார்.
தமிழின விடுதலைப் போரட்டத்தை முன்னெடுத்த எமது தலைவரைப் பெற்றெடுத்து வளர்த்து அருளிய அன்னையை உலகெங்கும் வாழும் தமிழ்மக்கள் அனைவர் நெஞ்சமதில் என்றும் நிங்கா நினைவுகளாய் நிலைத்தவரே சீரம் தாழ்த்தி வணங்குகிறோம் என்றும் உம் நினைவினில்….
பேரன்னை பார்வதி அம்மாவிற்கு வீரவணக்கம்!
வீரப்படுக்கையில் துயிலுறங்கும் அன்னையே !
நாம் அடையாமல் விடமாட்டோம் தமிழீழ மண்ணையே !
எம் தலைவரை பெற்றெடுத்தீர் தாயகம் வெல்லவே !
வீரதமிழனாய் வளர்த்தெடுத்தீர் தமிழீழ மண்ணையே
ஈழத்தமிழினம் இருட்டிலே உலன்றபொழுது!
கேட்க நாதியின்றி வீதியிலே கிடந்தபொழுது!
உரிமையின்றி அடிமைகளாய் தாய்மண்ணில் திரிந்தபொழுது !
உன் சிங்கக் குகைதனிலே எம் புலித்தலைவன் பிறந்துவந்தான்!
புதியதோர் வரலாற்றை பெற்றெடுத்த எம்தாயே !
புயல் வரினும் மலைவரினும், அவைகளே குண்டுகளாய் மாறிவிழினும் !
மக்களோடு மக்களாய் மனம் தளராது வாழ்ந்தீரே !
மரணம் நெருங்கிடினும் வீரமாய் சாய்ந்தீரே !
எம்மை நிமிரவைத்த புதல்வனை உலகிற்கு தந்தவரே !
எம் சிரம் குனிந்து வணங்குகிறோம் உம் பூவுடல் உறங்கக்கண்டு !
வீரத்தமிழ் நெஞ்சமெல்லாம் உம் உருவம் பதிவது கண்டேன் !
தமிழீழ தாகம் உடனே அவர்பெருவதும் கண்டேன் !
ஒருநாளும் ஓயமாட்டோம் நம் தமிழீழம் தலைக்கும்வரை!
உண்மையாய் உரைக்கிறோம்,
உம் கனவும் எம் கனவும் உறுதியாய் உண்மையாகும் !
எம் தியகசுடர் உம்மை வணங்குகிறோம் தமிழ் மக்கள் !
வீரமாய் சென்று வாரும் !
விரைவில் உம்மை அழைக்கும் விடுதலைத் தாயகம் !
https://youtu.be/wfrtFotBhh4