தெலுங்கானா கோர விபத்து: உயிரிழப்புக்கள் 52ஆக அதிகரிப்பு

தெலுங்கானாவில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சற்று முன்னர் வரை 52 ஆக அதிகரித்துள்ளது.

32 பெண்கள், 15 ஆண்கள் மற்றும் 4 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் 36 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. விபத்து இடம்பெற்ற இடத்தில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த விபத்து குறித்து தெலுங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் அதிர்ச்சி தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலையும் தெரிவித்தார்.

அத்துடன் காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ உதவிகளை வழங்குவதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபா இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !