தெலுங்கானாவில் ஆண்களுடன் நட்பு வைத்திருந்த 13 வயது சிறுமியை கொலை செய்த தந்தை

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவைச் சேர்ந்தவர் நரசிம்மா. இன்று அவரது 13 வயது மகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் என போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரேதத்தை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த சிறுமி தற்கொலை செய்யவில்லை என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
அந்த சிறுமி சில ஆண் நண்பர்களுடன் நட்பாக பழகிவந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை அவரை சரிமாரியாக தாக்கியுள்ளார். மேலும் அவரது கழுத்தையும் நெரித்துள்ளார். இதனால் அந்த சிறுமி மயக்க நிலைக்கு சென்றுள்ளார். இதையடுத்து அவர் மரணமடைந்தார்.
போலீசில் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் அவரது தந்தை மற்றும் தாய் இணைந்து அவரது உடலில் எண்ணெய் ஊற்றி தீவைத்துள்ளனர். பின்னர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தங்கள் மகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் என கூறி நாடகமாடியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து இருவர் மீதும் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். பெற்ற மகளை தந்தையே கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !