தெலுங்கானாவின் புதிய ஆளுநராக தமிழிசை நியமனம்!

தெலுங்கானா மாநிலத்தின் புதிய ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு தமிழக பா.ஜ.க தலைவராக பொறுப்பேற்ற இவரின் பதவிகாலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் முடிவடையவுள்ளது.
இந்நிலையில் அவர் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்காரணமாக தமிழகத்திற்கான பா.ஜ.க தலைவராக புதிய ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.