தெரேசா மே-யின் திருத்தப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தம் தோல்வி!

பிரதமர் தெரேசா மே-யின் திருத்தப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தம் 149 மேலதிக வாக்குகளால்  நாடாளுமன்றில் தோல்வியடைந்தது.

சற்றுமுன்னர் இடம்பெற்ற இந்த வாக்கெடுப்பில் திருத்தப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தத்திற்கு ஆதரவாக 242 வாக்குகளும் எதிராக 391 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி 149 வாக்குகளால் திருத்தப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இது, தெரேசா மே அரசாங்கத்துக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்றைய தினம் ஒப்பந்தத்துடன் வெளியேறுவது தொடர்பிலான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இந்த வாக்கெடுப்பும் தோல்வியடையுமாக இருந்தால், ஒப்பந்தமில்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நிலைமை பிரித்தானியாவுக்கு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !