தெரேசா மேயின் முடிவு தவறானது: ஸ்கொட்லாந்து முதலமைச்சர்

திட்டமிடப்பட்ட திகதிக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனும் தெரேசா மேயின் முடிவு தவறானது என ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிக்கோலா ஸ்ரேர்ஜன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தெரேசா மேயின் குறித்த தீர்மானம் சற்றும் எதிர்பாராத ஒன்று எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் முன்கூட்டிய பொதுத் தேர்தல் குறித்த அறிவிப்பை நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட தெரேசா மே, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுகின்ற நிலையில், பிரித்தானியாவில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த பொதுத் தேர்தல் உதவி புரியும் என தெரிவித்திருந்தார்.

பிரித்தானிய சட்டத்திற்கு அமைய ஐந்து வருடங்களுக்கு ஒருமுறையே பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அத் தேர்தல் மே மாதத்தில் வரும் முதலாவது வியாழக்கிழமையன்று நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் எதிர்வரும் 2020ஆம் ஆண்டே பிரித்தானிய பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !