தென்னிந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா உறுதி!
பிரபல தென்னிந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பிலிருந்து விரைவில் மீண்டு வருவேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள காணொளியில், ”கடந்த இரு நாட்களாக உடல் நிலையில் ஒருவிதமான சோர்வு தெரிந்தது. காய்ச்சலும் சளியும் இருந்தது.
இதை நான் எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை. உடனடியாக மருந்துவமனைக்குச் சென்றேன். அங்கே, எனக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாக சொன்னார்கள். மைல்ட் என்பதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள கூறினர்.
அதன்பின்னர் நான் சூளைமேட்டிலுள்ள மருத்துவமனைக்குச் சென்றேன். சரியான தருணத்தில் மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன். இன்னும் இரு தினங்களில் குணமடைந்து விடுவேன். எனக்குப் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை. நான் நல்லபடியாக இருக்கிறேன்.
எனவே யாரும் என்னை தொடர்புகொள்ள வேண்டாம் . நான் இங்கு ஓய்வு எடுக்கவே வந்துள்ளேன். என் குடும்பத்தினர் என்னுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.