தென்கொரியாவிலுள்ள அமெரிக்கத் துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க மாட்டோம்: டிரம்ப் அறிவிப்பு!

தென்கொரியாவில் உள்ள அமெரிக்கத் துருப்புகளின் எண்ணிக்கையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட மாட்டாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வட.கொரியத் தலைவருடன் நடைபெறவிருக்கும் சந்திப்பில் வடகொரியா எல்லை மற்றும் தென்கொரிய நாடுகளில் உள்ள அமெரிக்கத் துருப்புக்களின் எண்ணிக்கை தொடர்பாக ஊடகவியலாளர்களால் கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தற்போதைக்கு தென்கொரியாவில் உள்ள அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான திட்டம் எதுவும் இல்லை எனக் குறிப்பிட்டார்.

வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆகிய இருவரும் அடுத்த வாரம், இரண்டவாது முறையாக உயர்மட்டச் சந்திப்பை நடத்தவிருக்கின்றனர்.

இந்நிலையில், வியட்நாமில் நடைபெறவிருக்கும் குறித்த சந்திப்புத் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பல சவால்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !