தென்கொரியாவிலும் வெளியாகும் ‘NGK’
செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘NGK’ திரைப்படம் உலகளவில் வெளியாகவுள்ளதுடன் யூ தரச்சான்றிதழும் கிடைத்துள்ளது.
இத்திரைப்படம் தற்போது கொரியாவில் வெளியாகவுள்ள அதேநேரம் தென்கொரியாவில் எதிர்வரும் ஜூன் 1ஆம் 2ஆம் திகதிகளில் வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இத்திரைப்படம் இம்மாதம் 31ஆம் திகதி உலகளவில் வெளியாகவுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும், முதன்முறையாக செல்வா – சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு இரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இப்படத்தின் யுவன் ஷங்கர் ராஜா இசையில் டிரெய்லர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகியது. அரசியல் கலந்த கதைக்களத்தில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவில் இத்திரைப்படத்தில் சூர்யா, ராகுல் ப்ரீத்திசிங், சாய்பல்லவி, சரத்குமார், பாலாசிங், மன்சூர் அலிகான், சம்பத்ராஜ், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.