தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் தங்க உள்ள விடுதியில் தேர்தல் அதிகாரிகள் சோதனை
தூத்துக்குடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தங்க உள்ள விடுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற மே 19-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஒட்டப்பிடாரம் தொகுதி வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளார்.
பரப்புரைக்கு இன்று ஒட்டப்பிடாரம் தொகுதி செல்லும் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் தங்க திட்டமிட்டிருந்த விடுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பணப்பட்டுவாடா புகார் காரணமாக விடுதியில் உள்ள அரசியல் பிரமுகர்களின் வாகனங்களில் சோதனை நடக்கிறது.
மேலும் கோரம்பள்ளம் பகுதியிலுள்ள விடுதியில், அரசியல் கட்சியினரின் வாகனங்களிலும் அதிகாரிகள் சோதனை நடந்தி வருகின்றனர்.