துருக்கியில் படகு கவிழ்ந்து விபத்து – இருவர் உயிரிழப்பு, நால்வர் மாயம்

துருக்கியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காணாமல் போயுள்ளனர்.

ரஸ்யாவிலிருந்து 148 கிலோ மீற்றர் தொலைவில் கருங்கடற்பரப்பிலேயே இன்று(திங்கட்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக Samsun மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதன்போது குறித்த படகிலிருந்த ஏழு பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபத்தின் போது காணாமல் போயுள்ள நால்வரையும் தேடும் நடவடிக்கையில் 13 சுழியோடிகள் ஈடுபட்டுள்ளதாகவும் Samsun மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மேலும், இரண்டு படகுகளும், இரண்டு ஹெலிகொப்டர்களும், ஒரு இராணுவத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றும் காணாமல் போயுள்ளவர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !