Main Menu

துயர் பகிர்வோம் – திரு. வைரவநாதன் ரகுநாதன் (29/04/2020)

தாயகம் சுழிபுரத்தை பிறப்பிடமாகவும் மாங்குளம் ஒலுமடு மற்றும் வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ரகு என்று அழைக்கப்படும் திருவாளர். வைரவநாதன் ரகுநாதன் அவர்கள் 29ம் திகதி புதன் கிழமை வவுனியாவில் உள்ள தமது இல்லத்தில் இறைபதம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற வைரவநாதன் மற்றும் திருமதி அன்னலக்சுமி வைரவநாதன் (வவுனியா ) ஆகியோரின் சிரேஷ்ட புத்திரனும் கனகமலரின் அன்பு கணவரும் லக்சனா மற்றும் தேனுஜன் ஆகியோரின் அன்புத்தந்தையும் லோகநாதன்(கனடா ) கிருஷ்ணவேணி (ஆச்சி, ஜேர்மனி ) கைலாயநாதன் (பிரான்ஸ்) புஷ்பராணி (வவுனியா) அழகுராணி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30ம் திகதி வியாழக்கிழமை வவுனியாவில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள்.

தகவல்
திரு திருமதி. கைலாயநாதன் பிறேமா குடும்பத்தினர் (சகோதரர்)

தொடர்புகளுக்கு:
0094 776182066 (வவுனியா)
001 4165516223 (லோகு கனடா )
0049 2916608 (ஆச்சி ஜேர்மனி )
0033 651899094 (கயிலை பிரான்ஸ்)
0049 243352849 (அழகு ஜேர்மனி)

அன்னாரின் பிரிவுத்துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதோடு ஆழ்ந்த அனுதாபங்களையும் அன்னாரின் குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்!