Wed. Apr 24th, 2019

துயர் பகிர்வோம் – அமரர்.கவிஞர். கந்தையா இரத்தினசிங்கம் (30/04/2018)

தாயகத்தில் கிளிநொச்சி ஜெயந்தி நகரை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி கணேசபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட கவிஞர் திரு.கந்தையா இரத்தினசிங்கம் அவர்கள் இன்று 30.04.2018 திங்கட்கிழமை இறைவனடி எய்தியுள்ளார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலம் சென்றவர்களான கந்தையா தவமணி தம்பதிகளின் அன்பு மகனும், செல்லத்துரை தவமணியின் அன்புக்கணவரும் ராசபூபதி,விஸ்வநாதன் சுப்பிரமணியம் காலம் சென்றவர்களான ராசு செல்வராசா இளையதம்பி ஆகியோரின் சகோதரரும் காலம் சென்ற விக்கினேஸ்வரன் மாவீரர் ஈழன் சிவச்சந்திரன்,விஜே ஆனந்தன் (சுவிஸ்) சிவகுமார் ஜெர்மனி ) சிவமலர் (ஹொலண்ட்) சிவனேஸ்வரி (பிரான்ஸ்) சிவராணி (பெல்ஜியம்) சிவஞானசுந்தரம் (ஜெர்மனி) ஆகியோரின் அன்புத்தந்தையும் நல்லினி (இலங்கை) சரஸ்வதி (சுவிஸ்) சுசீலாதேவி (ஜெர்மனி) சாந்தினி (ஜெர்மனி) தேவா (ஹொலண்ட்) ஸ்ரீதரன் (பிரான்ஸ்) வில்வராஜா (பெல்ஜியம்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னார் பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள் அனைவரையும் கண்டு தாயக மண்ணையும் தமிழ் ஈழ விடுதலையையும் நேசித்து வாழ்ந்த உத்தம மனிதரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் நாளை (01.05.2018) அன்று மாலை 4.00 மணிக்கு திருநகர் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

அன்னாரின் பிரிவுத் துயரில் TRTதமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
தேவா (ஹொலண்ட்) 0031 180756094
திருமதி.சிவராணி வில்வராஜா (பெல்ஜியம்) 0032 14233778

Please follow and like us: