துயர்பகிர்வோம் – அமரர்.திரு.ஆறுமுகம் கதிர்காமராஜா (கிளி) (17/04/2021)
தாயகத்தில் யாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதியை சேர்ந்த பிரான்ஸ் Neuilly-sur-Marne ஐ வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. ஆறுமுகம் கதிர்காமராஜா (கிளி) அவர்கள் 15ம் திகதி ஏப்ரல் மாதம் வியாழக்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலம் சென்றவர்களான
திரு திருமதி ஆறுமுகம் இராசம்மாவின் அன்பு மகனும், காலம் சென்ற சிவசுப்பிரமணியம், சந்திரவதியின் அன்பு மருமகனும், சரோஜினியின் அன்புக்கணவரும்
காலம் சென்றவர்களான சண்முகசுந்தரம் , நகுலநாதன், தர்மராசா, தேவராசா, நகுலேஸ்வரி, மற்றும் மகேஸ்வரி, யோகேஸ்வரி, தர்மேஸ்வரி, ராஜேந்திரன், பாலச்சந்திரராசா ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 29ம் திகதி ஏப்ரல் மாதம் வியாழக்கிழமை காலை 10.30 மணியில் இருந்து 12.30 மணி வரைக்கும் 16 rue du Repos – 75020 Paris என்ற முகவரியில் இடம் பெற்று பின்னர் பி.ப 1.00 மணிக்கு Gambetta மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
தகவல் சகோதரர்கள் (பிரான்ஸ்)
இராஜேந்திரன் (குட்டி) 07 58 26 66 46
தர்மேஸ்வரி 06 22 84 16 24
பாலச்சந்திரராசா 07 52 87 40 00
இப் பிரிவுத் துயரில் தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதுடன் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்
பகிரவும்...