துமிந்த விவகாரத்தில் ஜனாதிபதி அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார்- சுமந்திரன்
துமிந்தவின் விடுதலை விவகாரத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளாரென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.எ.சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “அரசியல் கைதிகள் 16 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளமை அனைவருக்கும் மகிழ்ச்சியானதொரு விடயமாகும்.
எனினும், ஏனைய அரசியல் கைதிகளை ஏன் அரசாங்கம் விடுதலை செய்யவில்லை என்பது தொடர்பாக எனக்கு தெரியவில்லை.
இதேவேளை மரணத் தண்டனை கைதியான துமிந்த சில்வாவை விடுதலை செய்தமையானது கண்டனத்துக்குரிய விடயமாகும். இந்த செயற்பாடு நீதிமன்ற சுயாதீனத்தை கேள்விக்கு உட்படுத்துகிறது.
மேலும் நாட்டின் ஜனாதிபதி, தன்னுடைய அதிகாரத்தை இவ்விடயத்தில் துஷ்பிரயோகம் செய்துள்ளார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.