துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்: நியூசிலாந்திலிருந்து பங்களாதேஷ் கிரிக்கட் வீரர்கள் வெளியேறினர்!

நியூசிலாந்திலிருந்து  பங்களாதேஷ் கிரிக்கட் வீரர்கள் வெளியேறியுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்று 24 மணித்தியாலம் கடந்துள்ள நிலையில்,  பங்களாதேஷ் கிரிக்கட் வீரர்கள் இன்று (சனிக்கிழமை) பாதுகாப்பாக வெளியேறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து சென்றிருந்த பங்களாதேஷ் வீரர்கள் நேற்று கிரைஸ்ட்சர்சில் உள்ள மசூதி பகுதியை நெருங்கிய சந்தர்ப்பத்தில் அங்கே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில்  பேருந்து ஒன்றில் சென்றிருந்த வீரர்கள் பாதுகாப்பாக அவ்விடத்தை விட்டு வெளியேறினர் என தெரிவிக்கப்பட்டது.

நியூசிலாந்தில் நிலவும் அசாதாரண சூழலால் இன்று அந்நாட்டில் தொடங்கவிருந்த பங்களாதேஷ் டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையிலேயே அதில் கலந்து கொள்ளச் சென்றிருந்த பங்களாதேஷ் வீரர்கள் நாடு திரும்பியுள்ளனர். இன்று மாலை அவர்கள் தமது நாட்டைச் சென்றடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !