துப்பாக்கிகளைத் தடை செய்ய நியூஸிலாந்து நாடாளுமன்றம் அனுமதி
தானியங்கி ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகளைத் தடை செய்ய நியூஸிலாந்து நாடாளுமன்றம் அனுமதியளித்துள்ளது.
இதற்கமைய, துப்பாக்கி பயன்பாட்டு சட்டத் திருத்தத்திற்கு நியூஸிலாந்து நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
குறித்த சட்டத் திருத்தம் மீது இடம்பெற்ற இறுதி வாக்கெடுப்பில் சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டுள்ளன.
ஆளுநரின் அதிகாரம் பெறப்பட்டதன் பின்னர் அடுத்துவரும் சில நாட்களில் இந்தத் சட்டம் அமுல்ப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூஸிலாந்தின் க்ரைஸ்ச்சர்ச்சில் இரண்டு பள்ளிவாசல்களில் துப்பாக்கிதாரி ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, துப்பாக்கி பயன்பாட்டு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள உள்ளதாக பிரதமர் ஜசின்டா ஆர்டன் அறிவித்திருந்த நிலையில், தற்போது நியூஸிலாந்து நீதிமன்றத்தில் துப்பாக்கிகளை தடை செய்யும் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.