Main Menu

துபாய் சாலை விபத்தில் 8 இந்தியர்கள் பலி – உறுதி செய்தது இந்திய தூதரகம்

துபாயில் நடைபெற்ற சாலை விபத்தில் 8 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

துபாய்:
ஓமன் நாட்டு தலைநகரம் மஸ்கட்டில் இருந்து துபாய் நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அதில் வெளிநாட்டவர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
துபாய் அருகே ராஷியா என்ற பகுதியில் வந்தபோது, பேருந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
நேற்று மாலை 6 மணிக்கு விபத்து நிகழ்ந்த நிலையில் உயிரிழந்தவர்களின் விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
இந்நிலையில், துபாயில் நடைபெற்ற சாலை விபத்தில் ராஜகோபாலன், தீபக் குமார், வாசுதேவ் உள்பட 8 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.