தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளில் 85% வீதமானோர் தடுப்பூசி போடாதவர்கள்
தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளில் 85% வீதமானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சகம் வெளியிட்ட வார அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 26 ஆம் திகதியில் இருந்து ஓகஸ்ட் 1 ஆம் திகதிவரையான நாட்களில் தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளில் 79% வீதமாவர்கள் தடுப்பூசி போடாதவர்கள் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஓகஸ்ட் 1 ஆம் திகதியில் இருந்து ஓகஸ்ட் 8 ஆம் திகதி வரையான நாட்களில் தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளில் 85% வீதமானவர்கள் தடுப்பூசி போடாதவர்களே என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வெறும் 5% வீதமானவர்கள் மாத்திரமே இரட்டை தடுப்பூசியும் போட்டுக்கொண்டவர்கள் எனவும், மீதமானவர்கள் ஒற்றை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நான்காம் தொற்று அலையில் இதுவரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் பெருன்பான்மையானோர் தடுப்பூசி போடாதவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.