தீவிரவாத தாக்குதல் – இழப்பீட்டு தொகையாக 10 லட்சம் ரூபாய்
-கொல்லப்பட்ட நபர்களுக்கு தலா ஒரு மில்லியன் இழப்பீடு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அமைச்சரவை அமைச்சர்களின் தலைமையில் அலரி மாளிகையில் இன்று முற்பல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த தகவலை வெளியிட்டார்.
ஈமக்கிரியைகளுக்காக உயிரிந்த ஒருவருக்கு முதலில் ஒரு லட்சம் ரூபா வழங்கப்படும். இதன் பின்னர் அவரது இழப்பிற்காக இழப்பீட்டு தொகையாக 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அத்துடன் காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். அத்துடன் குண்டு தாக்குதல்களில் சேதமான தேவாலயங்களை புனரமைக்கும் பொறுப்பு இராணுவத்தினரிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை குறிப்பிட்டுள்ளார்.