Main Menu

தீவிரவாதத்தை ஏற்க முடியாது – எஸ் ஜெய்சங்கர்

தீவிரவாதத்தை ஏற்க முடியாது என்றும் அதே நேரத்தில் பாலஸ்தீனர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது முக்கியம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் வெளியுறவுத் துறைக்கான செனட் உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த 7ம் திகதி இஸ்ரேலில் நடந்தது கொடூரமான தீவிரவாதத் தாக்குதல் என்றும், இருந்தாலும் பாலஸ்தீன மக்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், போர் நீடித்துள்ள பகுதிகளில் மீண்டும் அமைதியும், ஸ்திரத்தன்மையும் ஏற்பட வேண்டும் என்றும், அப்பகுதியில் தொடர்ந்து மோதல் நீடிக்கக் கூடாது என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மேலும் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...