தி.மு.க.வின் தலைவர் பொறுப்பு: ஸ்டாலினிடம் ஒப்படைப்பது தொடர்பில் ஆலோசனை

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவையடுத்து, அக்கட்சியின் தலைவர் பொறுப்பை தற்போதைய செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் முறைப்படி ஒப்படைப்பது தொடர்பில் ஆதரவாளர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் எதிர்வரும் 19 ஆம் திகதி தி.மு.க. பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ள நிலையில், குறித்த கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மு.க.ஸ்டாலினை தலைவராக தேர்ந்தெடுப்பதற்கான அனைத்து நடைமுறைகளையும், செயலாளராக இருக்கும் துரைமுருகன் ஆரம்பித்துவிட்டதாகவும் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், பொது செயலாளராக நீண்ட நாட்கள் இருந்துவரும் அன்பழகனுக்கு வயது முதிர்வு ஏற்பட்டுவிட்டதால், அவரையும் அப்பதவி பொறுப்பிலிருந்து விலக்கி, அதற்கு பதிலாக துரைமுருகனை அமர்த்துவது தொடர்பிலும் கட்சி மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !