தி.மு.க போட்டியிடும் தொகுதிகளை அறிவித்தார் ஸ்டாலின்

நடைபெறவுள்ள 2019ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க, 20 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேரதல் குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மு.க.ஸ்டாலின் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தென்.சென்னை, மத்திய சென்னை, வட.சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நீலகிரி, பொள்ளாச்சி, தென்காசி, தஞ்சாவூர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய 20 தொகுதிகளில் போட்டியிடப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் நடவடிக்கைகளை, குறித்த பகுதியில் தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை ஏனைய அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !