தி.மு.க தலைவரை சந்திக்கிறார் ஆந்திர முதலமைச்சர்!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை ஆந்திர முதலமைச்சர்  சந்திரபாபு நாயுடு சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

பா.ஜ.க.வின் கூட்டணியில் இருந்து விலகிய பின்னர் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பா.ஜ.க.வையும், மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகின்றார்.

இந்தநிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டணியை திரட்டும் முனைப்பில் தற்போது செயலாற்றி வருகின்றார். அதன் ஒருபகுதியாக சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். குறித்த பேச்சுவார்த்தையின் முடிவில், இருகட்சிகளின் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மேலும் பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து மாநில கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் அப்போது கூறியிருந்தார்.

இந்தநிலையில் தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலினை நாளை சந்திரபாபு நாயுடு சந்திக்கவுள்ளார்.

தென்னிந்தியாவில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு மிகப்பெரிய தடையாக இந்த சந்திப்பு இருக்கும் எனவும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக இது அமையும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !