தி.மு.க. ஒருபோதும் ஆட்சிக்கு வராது – அமைச்சர் ஜெயகுமார்

தி.மு.க. ஒருபோதும் ஆட்சிக்கு வராது என, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். அத்துடன் ஊழலின் மொத்த உருவமே தி.மு.க. தான் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் இதன் போது கூறினார்.

சென்னை, ராயபுரத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே போதே, அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் பொத்தாம் பொதுவாக ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கக்கூடாது. யார் ஊழல் பேர்வழிகள், யார் திறமையான ஆட்சி நடத்துகிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !