திரையுலகிற்கு அவரைக் குறித்து நன்றாக தெரியும் !! வைரமுத்துவை கிண்டல் அடித்துள்ள சின்மயி

பெண் பத்திரிக்கையாளர் சந்தியா மேனனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக குற்றசாட்டு எழுதுள்ளதையடுத்து  கவிஞர் வைரமுத்துவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். பாடகி சின்மயி இன்னும் ஒரு படி மேலே போய் அவரைப் பத்தித்தான் திரையுலகிற்கே தெரியுமே என கிண்டல் அடித்துள்ளார்.

தமிழ் திரையுலகைப் பொருத்தவரை கவிஞர் என்றால் அது வைரமுத்துதான். சூப்பர் ஸ்டார்களான ரஜினி , கமல் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் எல்லாம் தங்களது படங்களுக்கு பாடல் எழுத வைரமுத்துவைத்தான் நாடுவார்கள்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நெருக்கமானவர் என்பதால் தமிழ் திரையுலகினர் வைரமுத்து மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். இந்நிலையில்தான் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் வைரமுத்து மீது செக்ஸ் புகார் ஒன்றை கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சந்தியா மேனன் என்ற அந்த பெண் பத்திரிகையாளர் தனக்கு வைரமுத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக டுவீட் செய்துள்ளார். தான் இளவயதில் வைரமுத்துவுடன் பணியாற்றியபோது ஒரு நாள் அவர் தன் அருகில் வந்த கட்டி அணைத்தாகவும், பின்னர் முத்தமிட்டதாகவும், எனக்கு என்ன செய்வதென்றே தெரியாததால் அங்கிருந்து ஓடிவந்து விட்டதாகவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்,

எனக்கு  வைரமுத்து  மீதும் அவருடைய எழுத்தின்மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்ததாகவும், ஆனால் அவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதால் அதிர்ச்சி அடைந்ததாகவும் அந்த டுவீட்டில் குறிப்பிட்டுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !