திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கு வைக்கப்பட சீல் அகற்றம்!

உயர் நீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து, திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் இன்று (சனிக்கிழமை) அகற்றப்பட்டுள்ளது.

திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முறைக்கேடுகள் நடைபெறுவதறாக குற்றம் சுமத்தி, ஒரு தரப்பினர் தமிழக முதலமைச்சரிடம் மனுவொன்றைக் கையளித்தனர்.

அதனைத் தொடர்ந்து தி நகரிலிருக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பூட்டு போட்டனர். அந்தப் பூட்டினை திறக்க விஷால் முற்பட்டபோது அவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் வருவாய்த்துறையினர் டி-நகரிலிருக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு சீல் வைத்தனர்.

இதனையெடுத்து விஷால் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த நிலையில் நீதிமன்றம்இ தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றுமாறு உத்தரவிட்டது.

இதற்கமைய, வருவாய்த்துறையினர் இன்று அந்த சீலை அகற்றி அலுவலகத்தின் இரு நுழைவாயில்களையும் திறந்து வைத்துள்ளனர். இதன்போது, தயாரிப்பாளர் சங்கத்தின் மீது குற்றம் சுமத்திய தரப்பினரும் அங்கு வந்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியதால் அங்கு பதற்றமான ஒரு நிலைமையும் ஏற்பட்டது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !