Main Menu

திருமண வாழ்த்து – விஜந்தன் & சுரேகா (28/09/2019)

தாயகத்தில் நயினாதீவை சேர்ந்த பிரான்சில் வசிக்கும் இராஜேந்திரன் – விஜயலட்சுமி தம்பதிகளின் செல்வப்புதல்வன் விஜந்தன் அவர்களும் , தாயகத்தில் குப்பிளானை சேர்ந்த பிரான்சில் வசிக்கும் சிவநேசன் – பகீரதி தம்பதிகளின் செல்வப்புதல்வி சுரேகா அவர்களும் கடந்த 15ம் திகதி செப்டெம்பர் மாதம் ஞாயிற்றுக்கிழமை திருமணப்பந்தத்தில் இணைந்து கொண்டார்கள்.

திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட விஜந்தன் & சுரேகா தம்பதிகளை, அன்பு அப்பா, அன்பு அம்மா, மாமா, மாமி, அண்ணாமார், அக்காமார், தம்பிமார், தங்கைமார், மச்சான்மார், மச்சாள்மார், பெரியப்பாமார், பெரியம்மாமார், பேத்திமார், பேரன்மார், சித்தப்பாமார், சித்திமார், மாமாமார், மாமிமார் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் நயினைப்பதி நாகபூசணி அம்மனின் அருளோடு தம்பதிகள் இன்று போல் என்றும் சகல செல்வங்களுடன் பல்லாண்டு வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறார்கள்.

கடந்த 15ம் திகதி செப்டெம்பர் மாதம் திருமணப்பந்தத்தில் இணைந்து கொண்ட விஜந்தன் சுரேகா தம்பதிகள் இன்று போல் என்றும் பல்லாண்டு காலம் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ்க வாழ்கவென TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார் மாமாமார், அன்பு நேயர்கள் அனைவரும் வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வரும் சிவகாரன், விவேகா, விருஷன், துர்சா ஆகியோருக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.