திருமண வாழ்த்து – ராஜிலன் & அலெக்சியா (10/09/2022)
பிரான்ஸ் Noisiel இல் வசிக்கும் இராஜரட்ணம் பாமா தம்பதிகளின் செல்வப் புதல்வன் ராஜிலன் அவர்களும் பிரான்ஸ் Savigny-le-Temple இல் வசிக்கும் இராஜமோகன் மல்லிகா தம்பதிகளின் செல்வப் புதல்வி அலெக்சியா அவர்களும் 10ஆம் திகதி செப்டம்பர் மாதம் சனிக்கிழமை இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொள்கிறார்கள்.
இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட ராஜிலன் & அலெக்சியா தம்பதிகளை அன்பு அப்பா அன்பு அம்மா மாமா மாமி சகோதரிகள் சாஜினி, ராஜினி பெரியப்பாமார் பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்திமார் மாமாமார் மாமிமார், அண்ணாமார் அண்ணிமார், அக்காமார் அத்தான்மார் தம்பிமார், தங்கைமார், மச்சாள்மார், மச்சான்மார் , மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் 16 செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் சிரஞ்சீவியாக வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட ராஜிலன் & அலெக்சியா தம்பதிகள் இன்று போல் என்றென்றும் பல்லாண்டு காலம் சீரோடும் சிறப்போடும் வாழ்க வாழ்கவென TRT தமிழ் ஒலி குடும்பமும் அன்பு நேயர்களும் வாழ்த்துகின்றோம்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பெற்றோர் இராஜரட்ணம் பாமா தம்பதிகள்
அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்