திருமண வாழ்த்து – திலீபன் & நிசா (16/02/2020)
தாயகத்தில் வடமராட்சியைச் சேர்ந்த அல்வாய் தெற்கு ராஜஸ்தலம் பிறப்பிடமாகக் கொண்ட நவரத்தினராஜா சத்யவதி தம்பதிகளின் செல்வப் புதல்வன் திலீபன் அவர்களும் அமெரிக்கா நியூயோர்க்கை சேர்ந்த பிரகாஷ் சரோஸ் தம்பதிகளின் செல்வப்புதல்வி நிசா ஆகிய இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள்.
திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட திலீபன் & நிசா தம்பதிகளை வாழ்த்துவோர்: அன்பு அப்பா, அம்மா, மாமா, மாமி, அக்கா தீபிகா, துரோஸ் குமார் மருமக்கள் ஐஸ்வர்யா, திருஷன், வினேஷ் மற்றும் தாயகத்தில் வசிக்கும் அம்மம்மா ராஜேஸ்வரி தணிகாசலம், பெரியம்மா, பெரியப்பா, தங்கைமார், மாமா ராஜேஷ்வரன் குடும்பத்தினர், லண்டனில் வசிக்கும் வரோ மாமா குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று சீரோடும் சிறப்போடும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
திருமணபந்தத்தில் இணைந்துள்ள திலீபன் & நிசா தம்பதிகள் இன்றுபோல் என்றும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென TRT தமிழ் ஒலியில் கடமை புரியும் அன்ரிமார் மாமாமார் அனைவரும் வாழ்த்துகின்றார்கள்.
இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அமெரிக்காவிலிருந்து திரு திருமதி ராஜா சத்தியவதி குடும்பத்தினர்.
அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்.