Main Menu

திருமண வாழ்த்து – சதீஷ்- மதிவதனி தம்பதிகள் (30/01/2016)

தாயகத்தில் கொக்குவில்லை சேர்ந்த பிரான்சில் வசிக்கும் வரதராஜன் விமலாதேவி தம்பதிகளின் செல்வப் புதல்வன் சதீஷ் அவர்களும் தாயகத்தில் வண்ணார் பண்ணையை சேர்ந்த பிரான்சில் வசிக்கும் துரைராஜா புஷ்பராணி தம்பதிகளின் செல்வப் புதல்வி மதிவதனி அவர்களும் கடந்த 24ம் திகதி ஜனவரி மாதம் ஞாயிற்றுக்கிழமை  இறை அருளால்  திருமண பந்தத்தில் இணைந்தனர்.
திருமண பந்தத்தில் இணைந்த சதீஷ்  மதிவதனி  தம்பதிகளை, இல்லறத்தில் இறைவன் அருள் பெற்று பல்லாண்டு காலம் பதினாறும் பெற்று வாழ்க வாழ்கவென வாழ்த்துவோர் :
அப்பா,அம்மா,மாமா,மாமி, சித்தப்பா,சித்தி, மச்சான்மார்,மச்சாள்மார்,அண்ணாமார்,அண்ணிமார்,தம்பிமார்,தங்கைமார்,அக்காமார்,அத்தான்மார்,மருமக்கள்,பெறாமக்கள் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்கவென  வாழ்த்துகின்றார்கள்.

2zxDa-2YEVw-1

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருபவர்கள் ஜெட் மார்கெட்டில் பணிபுரியும் ஊழியர்கள் ரமேஸ் மாஸ்டர்,அப்பன், அகிலன்,சீலன்,கேதீஸ்
இவர்களுக்கும் எமது நன்றிகள்.
திருமண பந்தத்தில் இணைந்துள்ள சதீஷ்  மதிவதனி தம்பதிகள் வையகம் போற்றிட வாழ்க பல்லாண்டு என மனதார வாழ்த்துகின்றோம்.

wedding

 

 

இருவர் உள்ளத்திலும் இனிமைகள் பொங்கிட
இருமை அல்லாது ஒருவராய் வாழ்ந்திட
நீங்கிடா செல்வங்கள் நிறையவே  பெற்றிட
நீடூழி காலம் இன்பமாய் வாழ்ந்திட
வாழ்த்துகின்றோம்! வாழ்த்துகின்றோம்!

– TRT தமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகள்