திருமண வாழ்த்து – இராஜதேவன் & பிராப்தனா (11/06/2018)
நோர்வேயில் வசிக்கும் சகாதேவன் இராஜ இராஜேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வன் இராஜதேவன் அவர்களும் நோர்வேயில் வசிக்கும் இராஜசூரியர் பராசக்தி தம்பதிகளின் செல்வப்புதல்வி பிராப்தனா அவர்களும் 10ம் திகதி ஜூன் மாதம் ஞாயிற்றுக்கிழமை டென்மார்க் அபிராமி அம்மன் ஆலயத்தில் அபிராமி உபாசகித்தாயின் ஆசியோடு நேற்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்கள்.
நேற்றைய தினம் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட இராஜதேவன் பிராப்தனா தம்பதிகளை வாழ்த்துவோர்: அன்பு அப்பா, அம்மா, மாமா, மாமி, அன்புத்தங்கை மச்சாள் சத்யா, மச்சான் ஏமாலயன், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அபிராமி உபாசகித்தாயின் ஆசியோடும் அருளோடும் 16 செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இராஜ தேவன் பிராப்தனா தம்பதிகளை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.
தமிழ் ஒலியின் இன்றைய அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகிறார்கள் பிரான்சில் வசிக்கும் ஜெயக்குமார் காஞ்சனா தம்பதிகள்.
அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்