திருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)

பிரான்ஸ் Boulogne நகரில் வசிக்கும் டேவிட் பிரேமா தம்பதிகளின் செல்வப் புதல்வன் அன்ரனி அவர்களும், பிரான்ஸ் Mantes-la-Jolie நகரில் வசிக்கும் பெனடிட் தாரணி தம்பதிகளின் செல்வப் புதல்வி பிறிஜித் அவர்களும் 21ம் திகதி ஜூன் மாதம் ஞாயிற்றுக் கிழமை திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்கள்.

நேற்று (21/06/2015) திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட அன்ரனி – பிறிஜித் தம்பதிகளை, அன்பு அப்பா, அம்மா, அந்தோனிப்பிள்ளை குடும்பம், மாமா, மாமி பேதுருப் பிள்ளை குடும்பம், சகோதர சகோதரிகள், மச்சான்மார், மச்சாள்மார், பெறாமக்கள், மருமக்கள், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் சீரோடும் சிறப்போடும் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

நேற்றைய தினம் திருமண பந்தத்தில் இணைந்த அன்ரனி – பிறிஜித் தம்பதிகளை தமிழ் ஒலியில் பணிபுரியும் அனைத்து அன்பு உறவுகள் மற்றும் நேயர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய (22/06/2015) தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் எமது அன்பு நேயர்கள் ஹொலண்டில் வசிக்கும் தேவா சிவமலர் தம்பதிகள்.

அவர்களுக்கும் எமது மனமார்ந்த  நன்றிகள்!

wedding-29



« (முந்தைய செய்திகள்)



© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !