Main Menu

திருகோணமலை மாவட்டம் – முழுமையான தேர்தல் முடிவுகள்: கூட்டமைப்புக்கு ஒரு ஆசனம்

திருகோணமலை மாவட்டத்திற்கான முழுமையாக தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி 86,394 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் இரண்டு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 68,681 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி 39,570 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 3,775 வாக்குகளைப் பெற்றுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2,745 வாக்குகளைப் பெற்றுள்ளது.

பதியப்பட்ட மொத்த வாக்குகள் – 288,868
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 227 117
செல்லுபடியான வாக்குகள் – 212 992
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 14,125