திரிவேணி சங்கமம் நீராடும் நிகழ்வு

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் கும்பமேளா திருவிழாவின்; மகரசங்கராந்தி பண்டிகையையொட்டி திரிவேணி சங்கமம் பகுதியல் நீராடும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ்நகரில் கொண்டாடப்படும் குறித்த திருவிழாவில் 32 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் 250 கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலைகளுடனும் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட ‘கும்ப்நகரி’ என்ற தற்காலிக நகரம் உருவாக்கப்படடுள்ளது.

குறித்த திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்காக லட்சக்கணக்கான பக்தர்களும் சாதுக்களும் பிரயாக்ராஜ் நகரில் திரண்டுள்ளனர்.

இந்நிலையில் இவ் பக்தர்களுக்கான அடிப்படை வசதிக்கான முன்னேற்பாடுகளை உத்தரப்பிரதேசம் மாநில அரசை சேர்ந்த 28 துறை அதிகாரிகளும், மத்திய அரசின் 6 அமைச்சகங்களை சேர்ந்த உயரதிகாரிகளும் ஏற்பாடு செய்திருந்தனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !