தியாகி அன்னை பூபதி அவர்களின் 31 ம் ஆண்டு நினைவு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் தியாகதீபம் அன்னை பூபதியின் 31ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு
இன்று நடைபெற்றுள்ளது.
தமிழர் தாயக பகுதியை ஆக்கிரமித்திருந்த இந்திய படையினரை வெளியேற கோரி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் குருந்த மர நிழலில் ஒரு மாத காலமாக உண்ணாவிரதம் இருந்து அன்னை பூபதி உயிர் நீத்திருந்தார்.
இந்த நிலையில் அவரின் 31ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று காலை 9.30 மணிக்கு கிளிநொச்சியில் அமைந்துள்ள அறிவகத்தில் நடைபெற்றுள்ளது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வட மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, தவிசாளர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வு (காணொளி)