திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் இலங்கை எம்பி சந்திப்பு!
சென்னை ஆழ்வார்பேட்டையில், இலங்கை எம்பி ரவூப் ஹக்கீம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார். சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரவூப், மு.க.ஸ்டாலினை மரியாதையின் நிமித்தமாக சந்தித்தாக கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்தாண்டு இறுதியில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் பங்கு பெரிய அளவில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து மு.க.ஸ்டாலினிடம் விளக்கமாக கூறியதாகவும், குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.