திங்கட்கிழமை அரச விடுமுறை அறிவிப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக எதிர்வரும் திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்தத் தீர்மானம் இன்று (சனிக்கிழமை) எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துவரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக இந்த விசேட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதேவேளை, அதிக மக்கள் கூடும் நிகழ்வுகள் மற்றும் விழாக்களையும், பொது இடங்களில் மக்களின் அதிக பிரசன்னத்தையும் தவிர்க்குமாறு அரசாங்கத்தால் வலியுறுத்தப்பட்டுள்ளது.