Main Menu

தாய்லாந்தைச் சேர்ந்த Opal Suchata Chuangsri உலக அழகியாக முடிசூடினார்

தாய்லாந்தைச் சேர்ந்த ஓபல் சுசதா சாங்ஸ்ரி (Opal Suchata Chuangsri ) 2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகியாக முடி சூடியுள்ளார்.

72ஆவது உலக அழகி போட்டியின் இறுதிச் சுற்று இந்தியாவின் தெலுங்கானாவின் ஐதராபாத்தில் அமைந்துள்ள ஹைடெக்ஸ் (HITEX ) அரங்கில் இன்று சனிக்கிழமை (31) மாலை 5:30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.

72ஆவது உலக அழகி போட்டிக்கான சுற்றுத் தெரிவுகள் மே 10 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டன.  இந்த போட்டியில் 108 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்குபற்றினர்.

இந்த போட்டியில் இலங்கையைச் சேர்ந்த அனுதி குணசேகர என்பவரும் பங்குபற்றியிருந்தார். அனுதி குணசேகர இலங்கையின் அநுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.

2025 ஆம் ஆண்டுக்காள 72 ஆவது உலக அழகியாக தெரிவு செய்யப்பட்ட தாய்லாந்தைச் சேர்ந்த ஓபல் சுசதா சாங்ஸ்ரிக்கு 2024 ஆம் ஆண்டுக்கான உலக அழகி கிறிஸ்டினா பிஸ்கோவா உலக அழகிக்கான முடியை அணிவித்தார்.

பகிரவும்...
0Shares