Main Menu

தாயின் மருத்துவச் செலவுக்காக பாட்டுப் போட்டியில் பங்கேற்ற மகளின் பாடலைக் கேட்டுக் கொண்டே உயிரிழந்த தாய்

இந்தோனேஷியாவில் தனது தாயின் மருத்துவச் செலவுக்காக பாட்டுப் போட்டியில் வென்ற சிறுமியின் தாய் உயிரிழந்த செய்தியைக் கேட்டு மேடையிலேயே கதறி அழுத காட்சி பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

அந்த நாட்டில் லிகா தங்தத் என்ற பாடல் போட்டி நடந்தது. இதில் வென்றவர்களுக்கு இந்திய மதிப்பில் 26 லட்சம் ரூபாய் பரிசாகக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனைக் கருத்தில் கொண்டு, உயிருக்குப் போராடும் தனது தாயின் மருத்துவச் செலவுக்காக இந்தப் போட்டியில் ஜன்னா என்ற 14 வயது சிறுமி பங்கேற்றார். இதில் தனது தாயை நினைத்து உருக்கமாகப் பாடி அனைவரையும் அசத்தினார்.

அரையிறுதிப் போட்டியில் பங்கேற்ற ஜன்னா அதில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு தகுதியானார். அவரது பாடலை டிவியில் பார்த்துக் கொண்டே ஜன்னாவின் தாயார் உயிரிழந்ததாக அவரது உறவினர் தெரிவித்தார். இதனைக் கேட்ட அந்தச் சிறுமி கதறி அழுத காட்சி காண்போரை கலங்க வைத்தது.