Main Menu

தாயகத்து உறவுகளை தலை நிமிர வைப்போம்

பிரான்ஸ்சை தளமாக கொண்டு இயங்கும் TRT தழிழ் வானொலியின் அனுசரனைக் கூடாக வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தாயகத்து உறவுகளைத் தலை நிமிர வைப்போம் என்ற செயல் திட்டத்தில் குறித்த வானொலியூடாக இணைந்து கொண்ட பிரானஸ் நாட்டைச் சேர்ந்த திருமதி.லாலாரவி அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட நிதிக் கூடாக வலி மேற்கு பிரதேசத்திற்கு உட்பட்ட வட்டுக் கிழக்கு சித்தன்கேணியில் வசிக்கும் திருமதி.பி.சந்திரமாலா என்ற போரில் மிகக்கடுமையான பாதிப்புக்களோடு வாழும் பெண் ஒருவருக்கு அவரது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் பொருட்டு கூரைத்தகடுகள், கம்பிவலைகள் மற்றும் கேழிக்குஞ்சுகளை வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள் 30.05.2015 அன்று குறித்த பெண் மணியின் வீட்டிற்கு சென்று வழங்கி வைத்தார்.

குறித்த பெண் மணி தற்போது மேற்படி வீட்டில் கோழி வளர்ப்பிலும் ஈடுபட்டுவருவது குறிப்பிடக் கூடியது.  இவ் நிகழ்வின் போது வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கின்ற போது தாயகத்து உறவுகள் தலைநிமிர வேண்டும் என்ற மிகப்புனிதமான இவ்வாறான செயல்களை மேற்கொள்ளும் மேற்கொள்ள தயாராக உள்ள அனைத்து புலம் பெயர் உணர்வாளர்கட்கும் நன்றி தெரிவிப்பதோடு இவ் மிகப்பெரிய பணிகளுக்கெல்லாம் அனுசரனை வழங்கும் TRT  தழிழ் வானொலிக்கும் நன்றி தெரிவித்ததோடு இவ்வாறான செயல்திட்டங்களுக்கு குறித்த பகுதி கிராமசேவகரின் உறுதிப்படுத்தல் மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் உறுதிப்படுத்தலுடன் அவர்கட்கு முன்னிலையில் இவ் உதவித்திடடங்கள் வழங்கப்படுகின்றது இது வெளிப்படுத்தலாக அமையவேண்டும்.

கடும் குளிரிலும் கடும் துன்பத்தின் மத்தியிலும் தாயக உறவுகளின் வேதனைத்தழும்புகளை நினைத்து மேற்கொள்ளப்படும் இவ் செயலில் உதவிகளை வழங்கியவரின் பெயர் அவரது நோக்கம் நிறைவு செய்யப்பட வேண்டும். இவ் வானொலி அலைகள் ஊடாக புலம் பெயர் உறவுகள் என்னுடன் தொடர்பு கொள்ள முடியும் இதே வேளை உதவிகள் மேற்கொள்பவருக்கும் வானொலி அமைப்பாளர்கட்கும் உதவித்திட்டத்திற்கான வேண்டுகைக் கடிதம், உறுதிப்படுத்தல் கடிதம், கிராம மட்ட அமைப்பின் கடிதம், செலவு உறுதிச்சீட்டை , மற்றும் ஒளிப்படங்கள் அனுப்பப்படுவதோடு இணையத்தளங்களிலும் பிரசுரிக்க உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டார்.

 

dd

fgfgf

பகிரவும்...
0Shares