தாயகத்திற்கு திரும்புவோர் அவதானம் – பெண்ணொருவர் கைது
ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜேர்மனியில் இருந்து தாயகம் திருப்பிய பெண்ணின் உடமைகளை சோதனையிட்ட இராணுவத்தினர், இலத்திரனியல் பொருட்களை மீட்டுள்ளனர். குறித்த பெண் இன்று காலை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற பெண் மீது சந்தேகம் கொண்ட இராணுவத்தினர் அவரை விசாரணை செய்துள்ளனர். அத்துடன் அவரது உடமைகளையும் சோதனையிட்டுள்ளனர். அதன் போது அவரது உடமையில் சில இலத்திரனியல் பொருள்ளை இராணுவத்தினர் கைப்பற்றினார்கள்.
அதனையடுத்து பெண் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். தற்போது தாயகத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரம் அடைந்துள்ளன. பல இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. புலம்பெயர் நாடுகளிலிருந்து தாயகத்திற்கு திரும்புவோர் மிகவும் அவதான செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.